வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்ய, தடை விதிக்கப்படவில்லை என, இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
புதுடெல்லியில், செய்தியாளர்களிடம் பேசிய, வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்சி,
“வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், இதுவரை, 80 நாடுகளுக்கு, 6.44 கோடி, தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில், ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
தடுப்பூசிகளுக்கு தேவை அதிகம் உள்ளதால், பல்வேறு நாடுகளிடம் இருந்தும் கோரிக்கைகள் வருகின்றன.
உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டே, தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன என்பதை, குறித்த நாடுகளுக்கு விளக்கிக் கூறியுள்ளோம்.
எனினும், தடுப்பூசி ஏற்றுமதி செய்ய, தடை ஏதும் விதிக்கப்படவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.