மன்னார் மாவட்டத்தில் உள்ள தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, எதிர்வரும் திங்கட்கிழமையை துக்க தினமாக அனுஸ்டிக்க வேண்டும் என்று,முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
மறைந்த ஆயரின் இறுதி நல்லடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினத்தை மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, மரியாதை நிமித்தமாக துக்க தினமாக கடைப்பிடிக்க வேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி துயரத்தை வெளிப்படுத்த வேண்டும்.
முஸ்ஸிம் சமூகமும் தமது வர்த்த நிலையங்களை மூடி பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.