பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்ற பின்னர் ஏழு பேர் அசாதாரண இரத்த உறைவுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
மொத்தத்தில், மார்ச் 24ஆம் திகதிக்குள் தடுப்பூசி போடப்பட்ட 18 மில்லியனில் 30 பேருக்கு இந்த இரத்த உறைவு இருந்தன.
அவை வெறும் தற்செயலானவையா அல்லது தடுப்பூசியின் உண்மையான பக்க விளைவுதானா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் கனடா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு தடுப்பூசி பயன்பாட்டை வயதானவர்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தியுள்ளது.