யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாக பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வளாகத்தில் கல்வி பயிலும் கண்டியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விடுமுறையில் சென்ற அவர் மீண்டும் பல்கலைக்கழகம் திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த போதே அவருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த மாணவி கிளிநொச்சி கொரோனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தின், பெண்கள் விடுதியின் ஒருபகுதி இன்று முதல் தற்காலிகமாக முடக்கப்பட்டு, அங்குள்ள, சுமார் 400 மாணவிகள் வெளிச்செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அங்கு தங்கியுள்ள மாணவிகளுக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.