கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளைச் செய்வதற்குரிய வயதெல்லையை குறைத்துள்ளதாக ரொரண்டோ மேயர் ஜோன் டெரி அறிவித்துள்ளார்.
இந்த வயதெல்லை இன்று முதல் 10ஆண்டுகளாக குறைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பிரகாரம், 60வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் வெளிநோயாளர் பிரிவுகளில் தங்களைப் பதிவு செய்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் ரொரண்டோவில் அனைத்து சமூகத்தினருக்கும் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





