உருமாறிய கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் மாகாணத்திற்குள் பிரவேசித்துள்ளார்களா என்பது தொடர்பிலான தடமறிதல் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக ஆல்பேர்ட்டாவின் பொதுசுகாதார தலைமை அதிகாரி வைத்தியர் தீனா ஹின்ஷா (Deena Hinshaw) தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் பிரேசில் உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளுக்ககான பயணங்களை மேற்கொண்டவர்களை மையப்படுத்தியே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாகாணத்தின் சுகாதார நிலைமைகளை சீராக பேணுவதாக இருந்தால் ஆபத்து மிக்க உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.





