யாழ்ப்பாணம், வலிகாமம் கல்வி வலயத்தில் உள்ள மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியை ஒரு வாரத்துக்கு மூடுமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியின் அதிபருக்கும், ஆசிரியர் ஒருவருக்கும் நேற்றைய பரிசோதனைகளின் போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்தே, குறித்த பாடசாலையை ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு, முடிவு செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும், 10ஆம் திகதி பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறை விடப்படவுள்ளதால், இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மீளத் திறக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.