கொசோவோவின் புதிய ஜனாதிபதியாக 38 வயதுடைய, சட்டப் பேராசிரியரான விஜோசா ஒஸ்மானி (Vjosa Osmani) c செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டுப் போருக்குப் பின்னர், கொசோவோவின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இவர், நாட்டின் இரண்டாவது பெண் ஜனாதிபதியாகவும் விளங்குகிறார்.
120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றின் விசேட அமர்வில், இரண்டு நாட்கள் இடம்பெற்ற வாக்கெடுப்பில் விஜோசா ஒஸ்மானிக்கு ஆதரவாக 71 வாக்குகள் கிடைத்துள்ளன.
கொசோவோ விடுதலை இராணுவத்தின் தலைவரான, ஜனாதிபதி ஹஷிம் தாசி (Hashim Thaci) சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளதை அடுத்து, கடந்த நொவம்பர் மாதம் பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து, விஜோசா ஒஸ்மானி பதில் ஜனாதிபதியாக பணியாற்றி வந்த நிலையிலேயே புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.