தமிழ் சமூகத்திற்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் புதன்கிழமை ஏழாம் திகதி ஸ்காபறோ கொன்வென்ஷன் சென்டரில் பிற்பகல் 3 மணிமுதல் இரவு 9 மணி வரையில் இந்த முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்காபறோ சுகாதார வலையமைப்பாலும், உள்ளுர் சமூகப் பங்காளிகளாலும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் வைத்தியர்களான, எலன் அம்பலவாணர், அருணா லம்போதரன், ரஜேஸ்வரி லோகநாதன், பொன் சிவாஜி,மயூரேந்திரா ரவிச்சந்திரன், மணிவண்ணன் செல்வநாதன், ஷிவாணி ஸ்ரீதரன், கண்ணா வேலா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன், இந்த முகாமில் 70வயதிற்கு மேற்பட்டவர்கள் தமக்கான கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேரில் வருகை தர முடியாதவர்கள் www.scarbvaccine.ca என்ற இணை முகவரியை பயன்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.