நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட முகநூல் பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் தொலைபேசி எண்கள் என்பன ஆரம்ப கட்ட தகவல்களை வெளியிடும் அமைப்பொன்றினால் இணையத்தில் இலவசமாக வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வெளியிடப்பட்ட தரவுகளில் 106 நாடுகளைச் சேர்ந்த 533 மில்லியனுக்கும் அதிகமான முகநூல் பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 32 மில்லியன் பயனாளர்கள், இங்கிலாந்தில் 11 மில்லியன் பயனாளர்கள் மற்றும் இந்தியாவில் 6 மில்லியன் பயனாளர்களின் தரவுகள் உள்ளடங்குகின்றன.
அத்துடன், தொலைபேசி எண்கள், முகநூல் கணக்குகள், சுய விபரங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் என்பன இவ்வாறு பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.