சிறிலங்காவின் மூத்த கவிஞர் கல்முனை பூபால் என்ற கவிமாமணி நீலாபாலன் இன்று காலமானார்.
இலக்கியத்துறையில் பன்முகத் திறமையாளரான இவர் கவிதை, சிறுகதை, குறுங்கதை, மெல்லிசைப் பாடல்கள் எழுதியுள்ளதுடன் திறனாய்வாளருமாவார்.
இவர் பதினைந்து நாடகங்களுக்கு மேல் எழுதி மேடையேற்றி பரிசுகள் பெற்றிருக்கின்றார்.
சிறிலங்கா வானொலி தமிழ்ச் சேவையில் 1990 முதல் 1997 வரையான காலப் பகுதியில் ‘கவிதைக் கலசம்’ என்ற நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கினார்.
அத்துடன் சிறிலங்கா வானொலியில் ‘முத்துப் பந்தல்’ என்ற நிகழ்ச்சியின் ஊடாக பல இலக்கியவியலாளர்களை பேட்டி கண்டு அறிமுகம் செய்துள்ளார்.