நோர்த்யோர்க் (North York) பகுதியில் நேற்றுக்காலை 75 வயதுடைய முதியவர், கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
Finch Avenue மேற்குப் பகுதியில் இருந்து நேற்றுக்காலை 6.45 மணியளவில் கிடைத்த அவசர அழைப்பை அடுத்து ரொறன்ரோ காவல்துறையினர், விரைந்து சென்ற போது ஒரு முதியவர் அசைவின்றி கிடந்துள்ளார்.
உயிரிழந்த முதியவரின் உடலில் ஒரே ஒரு குத்துக்காயம் மாத்திரம் இருந்துள்ளது.
இதையடுத்து அவரது மனைவியான 62 வயதுடைய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.