அரசியல்வாதிகளுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் இணைவழியிலான கடுமையான விமர்சனங்கள் அதிகளவில் இடம்பெறுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அண்மைக்காலங்களில் அதிகளவானவர்கள் இணைவழியிலான உரையாடல்கள் மற்றும் பணிகளை அதிகளவில் மேற்கொள்வதன் காரணமாக இந்த நிலைமை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கியூபெக் அரசியல்வாதி கிறிஸ்டின் செயின்ட்-பியரே (Christine St-Pierre) இணைவழியில் தெரிவித்த கருத்துக்கு அவர் மீது முன்வைக்கப்பட்ட மிகக் கடுமையான விமர்சனங்கள் இதற்கு நல்ல உதாரணமாக அமைவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேநேரம், அரசியல்வாதிகளும், இணைவழியிலேயே தமது பிரசாரங்கள் மற்றும் பிரபல்யமடைவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.