அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து குடியிருப்பாளர்கள் ஏப்ரல் 19 முதல் தனிமைப்படுத்தப்படாமல் இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் (Jacintha Artern) இந்த தகவலை செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
ஒக்டோபர் மாதத்திலிருந்து, நியூசிலாந்து பயணிகள் தனிமைப்படுத்தப்படாமல் பெரும்பாலான அவுஸ்திரேலிய மாநிலங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு நாடுகளிலும் புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவடைந்துள்ள நிலையிலேயே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது