அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்துவது குறித்த முறைமைகளை மாற்றியமைப்பது குறித்து நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு தயங்குகின்றமை கவலைக்குரியது என்று அதன் துணைத்தலைவர் வைத்தியர் ஷெல்லி டீக்ஸ் (Shelley Deeks) தெரிவித்தார்.
எவ்வாறாயினும் அனைத்து விடயங்களும் வெளிப்படைத்தன்மையுடனேயே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பக்கவிளைவுகள் தொடர்பில் ஆய்வுகள் நிறைவுக்கு வந்துள்ளபோதும் மாறுபட்ட தகவல்கள் கிடைப்பதாகவும் பிற நாடுகளில் இருந்து கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் ஆபத்துக்கள், மற்றும் பாரிய பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து ஆய்வுகளும், அவதானங்களும் அவசியம் என்றும் அவர் கூறினார்.