ஒன்ராரியோவில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகமாக காணப்பட்ட மூன்று பிராந்தியங்கள் தொடர்பில் மாகாண அமைச்சரவை கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் மாகாண முதல்வர் டக்போர்ட் தலைமையில் கூடிய அமைச்சரவை, ஒன்ராரியோவின் யோர், பீல் மற்றும் ரொரண்டோ ஆகிய பிராந்தியங்களில் அதிகரித்து வரும் தொற்றாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை ஆராய்ந்தது.
அத்துடன், இந்தப் பிராந்தியங்களில் அண்ணளவாக அறுபது சதவீதமானவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பிலும் மாகாண சுகதார அமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனினும், ஒன்ராரியோ மாகாண சபையின் தீர்மானங்கள் தொடர்பில் இதுவரையில் எவ்விதமான உத்தியோக பூர்வமான தகவல்களும் வெளியாகவில்லை.
அதேநேரம், மீண்டும் வீடுகளில் தங்கியிருக்கும் அறிவிப்பை உடன் அமுலுக்கு வரும் வகையில் அறிவிக்கலாம் என்று அமைச்சரவையின் அமைச்சர்களை மையப்படுத்திய தரப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.