திருவண்ணாமலையில் சுமார் 20 பேர் அதிக காச்சலுடன் வருகை தந்ததால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில், பலர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
அதேநேரம் சிங்காநல்லூரில் 2 அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் மேற்படி தாமதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.