2036ஆம் ஆண்டு வரை ரஷ்ய ஜனாதிபதி பதவியில் நீடிக்கும் வகையிலான சட்டத்தில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.
68 வயதாகும் புதின், கடந்த 2000ஆம் ஆண்டு முதன்முதலில் ரஷ்ய ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், இரண்டு முறை ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தார்.
பின்னர், பிரதமராகப் பதவியேற்ற அவர் மீண்டும் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.
அவரது பதவிக்காலம் வரும் 2024ஆம் ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், 2036ம் ஆண்டு வரை தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் நீடிப்பதற்குத் தேவையான சட்டத்திற்கு புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.
ரஷ்யாவின் அரசியல் சட்டப்படி ஒருவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதி பதவியில் இருக்க முடியாது.
இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்துள்ள ஜனாதிபதி புடின், ஒருவர் நான்கு முறை வரை தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் இருக்கும் வகையிலான சட்டத்தை கடந்த ஆண்டு முன்மொழிந்தார்.
இதற்கு, மக்கள் ஆதரவு அளித்துள்ள நிலையில், இந்தச் சட்டத்திற்கு புடின் ஒப்புதல் வழங்கியுள்ளார்.