45 வயதிற்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு, இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.
45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 45 வயது நிரம்பிய மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மத்திய அரசு அனைத்து அமைச்சுக்கள், மற்றும் நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.