கோவை கெம்பட்டி காலனியில் உள்ள வாக்குச்சாவடிக்கும் கமல்ஹாசன் நேரில் சென்று ஆய்வு செய்தபோது அவருடன் அவரது மகள் சுருதிஹாசனும் வாக்குச்சாவடிக்குள் பிரவேசித்தமைக்கு எதிராக பாரதீய ஜனதாக்கட்சி முறைப்பாடு அளித்துள்ளது
கோவை மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் நந்தகுமார், சுருதிஹாசன் வாக்குச்சாவடிக்குள் பிரவேசித்தமைக்கு எதிராக முறைப்பாடு அளித்துள்ளார்.
அவரது முறைப்பாட்டில், தேர்தல் விதிமுறைப்படி வேட்பாளர் மற்றும் அவரது அனுமதி பெற்ற முகவர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல வேண்டும். ஆனால் விதியை மீறி சுருதிஹாசன் பிரவேசித்துள்ளார்.
ஆகவே கமல் ஹாசன் மீது குற்றவியல் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்