ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்துகள் சிறிலங்காவுக்கு கிடைக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ தசநாயக்க, கூறுகையில், முதற்கட்டமாக ஒரு இலட்சம் இலங்கையர்களுக்கு இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு இரண்டு இலட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்துகள் எடுத்து வரப்படவுள்ளது..
21 நாள் இடைவெளியில் இரண்டு முறை இந்த தடுப்பு மருந்தை செலுத்த வேண்டியுள்ளதோடு ரஷ்யாவிடம் இருந்து முதலில் 69.65 மில்லியன் டொலர் செலவில், 7 மில்லியன் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தைப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.
எனினும், உலக சுகாதார நிறுவனத்தினால் இந்த மருந்துக்கு இன்னமும் அனுமதி வழங்கப்பட்டவில்லை என்று மேலும் குறிப்பிட்டார்.