ஒன்ராரியோவில் வியாழக்கிழமை(08) 12.01 AM முதல் அடுத்து வரும் 28 நாட்களுக்கு வீட்டில் தங்கியிருக்கும் முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராரியோ மாகாணத்தின் முதலமைச்சர் டக் போர்ட் (DOUG FORD) இன்றையதினம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் கொரோனா பரவலடைய ஆரம்பித்ததிலிருந்து மூன்றாவது தடவையாக முடக்கல் நிலைக்கு ஒன்ராரியோ மாகாணம் செல்கின்றது.
இதேநேரம், ஒன்ராரியோ முதல்வர் டக்போர்ட், (DOUG FORD) அண்மைய நாட்களில் மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் அமைச்சரவையில் ஆராய்ந்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இம்முறை கொரோனா விதிமுறைகள் மிக இறுக்கமாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.