ஒன்ராரியோ முதல்வர் டக்போர்ட்(DOUG FORD) வீட்டில் தங்கியிருக்கும் முடக்கல் நிலைமையை அறிவித்தமைக்கு ரொரண்டோ முதல்வர் ஜோன் டெரி (JOHN TORRY) நன்றியைத் தெரிவித்துள்ளார்.
புதிய விதிமுறைகளின் மூலம் மூன்றாவது அலையின் கணிசமான தாக்கத்தினை குறைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு அனைத்து ஒன்ராரியர்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், இக்காலப்பகுதியில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.