ஒன்ராறியோவில், நேற்று 3215 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை 2 ஆயிரத்து 938 தொற்றாளர்களும், செவ்வாய்க்கிழமை 3 ஆயிரத்து 65 தொற்றாளர்களும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நேற்று, அதனை விடவும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி 17ஆம் நாள், 3 ஆயிரத்து 422 தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பின்னர், அதிகபட்ச தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஒரு வாரத்துக்கு முன்னர், 7 நாட்கள் சராசரி, 2 ஆயிரத்து 316 ஆக இருந்த தொற்றுப் பரவல், தற்போது, 2 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது.
ஒன்ராறியோ மருத்துவமனைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 397 ஆகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் 504 ஆகவும் உயர்ந்துள்ளன.
ஒரு வாரத்துக்கு முன்னர் பரிசோதனை செய்யப்பட்டவர்களில், 4.8 வீதமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில், 6.7 வீதமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.