காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனையில், சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராதிகா மற்றும் சரத்குமார் தம்பதியர் பங்குதாரர்களாகவுள்ள நிறுவனம் 2014ஆம் ஆண்டில் திரைப்படத் தயாரிப்புக்காக கடனாகப் பெற்ற கடனை மீளச் செலுத்தவில்லை.
இது தொடர்பாக ராதிகா மற்றும் சரத்குமார் தரப்பு நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்த காசோலைகளும் திரும்பியதால் சரத்குமார் மீது ஏழு வழக்குகளும், ராதிகா மீது இரண்டு வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் இன்று காலை இருவருக்கும் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இன்றைய வழக்கு விசாரணைக்கு ராதிகா முன்னிலையாகாத நிலையில், அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அவர், சிகிச்சை முடிந்ததும் நீதிமன்றில் முன்லையாவார் என அவரது சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.