யாழ்ப்பாணம், வடமராட்சி, கரவெட்டி மேற்கு, பகுதியில் பனையில் இருந்து வீழ்ந்து சீவல் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான, 53 வயதுடைய, மகாலிங்கம் விவிராசா என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
நேற்று காலை சீவல் தொழிலுக்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற அவர் பனை மரத்திலிருந்து விழுந்து இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.