தனது மனைவியைக் கொலை செய்தமைக்காக தண்டனை அனுபவித்து வரும் கியூபெக் மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜாக் டெலிஸ் (Jacques Delisle) மீது மற்றொரு புதிய வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதற்கான உத்தரவை நீதி அமைச்சர் டேவிட் லமேட்டி (David Lametti) விடுத்துள்ளார்.
நியாயமான நீதி வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த புதிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.