வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மூவர் காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள், நேற்றுக் காலை 8 மணிக்கு கரை திரும்ப வேண்டிய நிலையில், நேற்று இரவு வரை எந்த தொடர்புகளும் இல்லாமல் உள்ளனர் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கற்கோவளத்தைச் சேர்ந்த 47 வயதுடைய, வல்லிபுரம் பழனிவேல், 47 வயதுடைய, கதிர்காமு சோதிலிங்கம், 40 வயதுடைய, தவச்செல்வம் ஆகிய மூவருமே காணாமல் போயுள்ளனர் என்று உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன மீனவர்கள் மூவரையும் தேடி கடற்படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.