பீல் பிராந்தியம், மிசிசாகா, பிராம்ப்டன் மற்றும் காலேடன் ஆகிய பகுதிகள் அதிகூடிய அவதானப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் உருமாறிய வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்துக்கள் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு அவதானப்பு பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் இந்த பகுதிகளில் அடுத்துவரும் வாரங்களில் கொரோனா தடுப்பூசியை விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போதைய நிலையில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.