நாட்டின் வடக்கில் உள்ள திக்ரே (Tigray) பிராந்தியத்தில், 15 ஆண்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமது படையினருக்குத் தொடர்பு இல்லை என்று எதியோப்பிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வரலாற்று புகழ் பெற்ற அக்சும் (Axum) நகருக்கு அருகேயுள்ள மலைப்பகுதியில், 15 ஆண்களை எதியோப்பிய இராணுவ சீருடை அணிந்தவர்கள் சுட்டுப் படுகொலை செய்யும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த போர்க்குற்ற ஆதாரங்கள் வெளியானதை அடுத்து எதியோப்பியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில், இந்தக் காணொளி திக்ரே பிராந்தியத்தின், TPLF படைகளால் திரிபுபடுத்தப்பட்டது என்றும், எதியோப்பிய படைகளிடம் இருந்து களவாடப்பட்ட சீருடைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.