ரொறன்ரோ, Scarborough வில், 40 அகவையுடைய ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Kennedy வீதி, Antrim Crescent பகுதியில், உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் நேற்று மாலை குறித்த நபர் மீட்கப்பட்டிருந்தார்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, இரண்டு சந்தேக நபர்களை கைது செய்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்