யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை அருந்தியவர் உயிரிழந்துள்ளார்.
நாகர்கோவில் மேற்கு பகுதியை சேர்ந்த, 47 வயதுடைய, கந்தையா சிறிக்குமார் என்பவரே, மர்ம திரவத்தை அருந்தியதால் மரணமாகியுள்ளார்.
நேற்றுமாலை கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை, மதுபானம் என நினைத்து அருந்திய போது, குறித்த நபர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அம்பன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மந்திகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவர் உயிரிழந்துள்ளார்