கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கு ஏற்புடையவர்கள் என்று ரொரண்டோ சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இவ்வாறானவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரொரண்டோ பொதுசுகாதரத்துறை தெரிவித்தது.
அதேநேரம், கடந்த காலங்களில் கல்வித்துறையில் உள்ளவர்கள் அவசியமாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வகையினருக்குள் உள்ளீர்க்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.