பின்தங்கிய நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் சென்றடைவதை உறுதி செய்யும் ஐ.நா.வின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ், லிபியா 57ஆயிரம் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தங்களது கொரோனா தடுப்பூசிகள் லிபியாவை வியாழக்கிழமை வந்தடைந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அங்கு சுகாதார முன்களப் பணியாளர்கள் மற்றும் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாக்ஸ் திட்டத்தின்கீழ், கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி சர்வதேச விநியோகத்தை வழங்கியதிலிருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றடைந்துள்ளது.