தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கைதியின் தாயாரான, கோண்டாவில் கிழக்கில் வசிக்கும் தேவராசா தேவராணி என்பவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்திலும், இது தொடர்பாக, அரசியல் கைதியின் தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.