யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் ஆகியவற்றில், 760 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே, 26 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், யாழ். சிறைச்சாலையில் ஒருவருக்கும், திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்த 22 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டாவளை, முல்லைத்தீவு ஆகிய இரு இடங்களிலும் தலா ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். என்றும் மருத்துவர் .கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று கொரோனா தடுப்பு தேசிய மையத்தில் நடந்த கூட்டத்திலும், யாழ்ப்பாண நிலவரங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சில நாட்களாக அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்ற போதும், அடுத்த 4 அல்லது 5 நாட்களுக்குள் நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.