மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் நான்காவது கட்ட வாக்களிப்பின் போது, 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 5 மாவட்டங்களில் பதற்றம் நிறைந்த 44 தொகுதிகளுக்கு, பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கூச் பெஹர் மாவட்டத்தில் உள்ள சிதால்குர்ச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்களிக்க நின்ற ஒருவரை, மர்ம நபர்கள் வெளியே இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையில் கடுமையாக மோதல் ஏற்பட்டுள்ள்ளது.
இந்த வன்முறையை கட்டுப்படுத்த சிஆர்பிஎவ் எனப்படும் மத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை கண்டித்துள்ள மாநில முதல்வர் மம்தா பனர்ஜி, மத்திய அரசு பாதுகாப்பு படையினரைக் கொண்டு அராஜகத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அதேவேளை இந்தச் சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் வாக்களிப்பை தேர்தல் ஆணையம் இடைநிறுத்தியுள்ளது