மூன்றாவது கொரோனா அலைக்கு மத்தியில் நாட்டில் தேர்தல் ஒன்றை நடத்தி நெருக்கடிகளை ஏற்படுத்த முனையவில்லை என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்தார்.
லிபரல் கட்சியின் மூன்று நாள் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் லிபரல் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் ஒருங்கிணைப்பதே முக்கியமான தனது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாராளவாதிகளை ஒன்றிணைப்பதன் ஊடாக எமது இலக்குகளை விரைந்து அடைந்து கொள்ள முடியும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைவிடவும், லிபரல் கட்சி தலைமையிலான அரசாங்கமானது, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையை மிகவும் வினைத்திறனான முறையில் கையாண்டு செல்வதாகவும் குறிப்பிட்டார்.
மீண்டெழும் பொருளாதாரச் செயற்பாடுகளுக்குரிய திட்டமிடல்களையும் தாம் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, பிரதமரின் உரையானது ஒரு தேர்தல் மேடைப்பேச்சுப் போன்று இருந்ததாக விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.