கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ஆம் நாள் தொடங்கவுள்ள நிலையில், அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஜப்பானில் மார்ச் முதல் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜனவரி மாதம் அவசரநிலை தளர்த்தப்பட்ட பின்னர், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
டோக்கியோவில் பாதிப்பு அதிகரித்துள்ளதால் பிரதமர் சுகா மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
இரவு வாழ்க்கை, மருபானசாலைகள் மற்றும் உணவகங்களில் ஒன்று கூடுவது தான் தொற்றுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, பயணங்களை தவிர்க்கும் படியும், டோக்கியோவில் மதுபானசாலைகள், உணவு விடுதிகள் திறக்கப்படும் நேரத்தை குறைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மே 11 ஆம் நாள் வரை தொடர உள்ளது.
அதேவேளை, ஜப்பானின் ஒசாகா நகர வீதிகளில் அடுத்த வாரம் நடைபெற இருந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்ட நிகழ்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.