கனடாவில் கொரோனாவின் மூன்றாவது அலை காணப்படுவதால், பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிக்கப்படும் என்று, தகவல்கள் கூறுகின்றன.
கனடாவில் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் நாளுடன் முடிவடையவுள்ள நிலையில், மேலும் 30 நாட்களுக்கு அந்த கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச பயணம் குறித்து கவனத்தில் எடுப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்று சுகாதார அமைச்சர் Patty Hajdu தெரிவித்துள்ளார்.
அதேவேளை எல்லைகள் எப்போது திறக்கப்படும் என்றும் அவர் கருத்து எதையும் வெளியிடவில்லை.
அத்துடன் பயணக் கட்டுப்பாடுகளை மீளாய்வு செய்யும் போது பல்வேறு காரணிகள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.