யாழ்.மேயர் மணிவண்ணனின் கைதுக்கு ரெரண்டோ மற்றும் பிரம்டன் மேயர்கள் கடுமையான கண்டனத்தினை வெளியிட்டுள்ளனர்.
ரொரண்டோ மேயர் ஜோன் டொரி (JOHN TORRY) தனது கீச்சகப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நான் யாழ்.மேயரின் கைதினை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் தமிழர்கள் இவ்விதமாக நடத்தப்படுவதை வன்மையாக கண்டிப்பதோடு இதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் (PATRICK BROWN) செய்துள்ள கீச்சகப் பதிவில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா குறித்த விசாரணைகளை மேற்கொள்வதை வலியுத்தும் தீர்மானத்திற்கு பழிவாங்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது.
இதனைஏற்றுக்கொள்ள முடியாது. முழுமையான தவறாகும். அத்துடன் அங்குள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.ஐ.நா இனப்படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.