காஷ்மீரில் , காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இரண்டு மாவட்டங்களில் காவல்துறையினரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 72 மணி நேரத்தில் 4 நடத்தப்பட்டதாகவும் இதில் டிரால் மற்றும் சோபியானில் 7 தீவிரவாதிகளும் அல் பதர் மற்றும் ஹரிபோராவில் 3 தீவிரவாதிகளும் பிஜிபெஹ்ராவில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன என்றும் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கரே தொய்பாவுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும் இதன்போது, கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் கண்டெடுக்கப்பட்டன என்றும் ஜம்மு காஷ்மீர் பொலிஸ் தலைவர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.