கின்னஸ் சாதனையாளர் ஆழிக்குமரன் ஆனந்தனின் 50 ஆண்டுகால நீச்சல் சிறிலங்கா விமானப்படைச் சிப்பாய் ஒருவர் முறியடித்துள்ளார்.
32 வயதுடைய றொஷான் அபேசுந்தர என்ற சிறிலங்கா விமானப்படைச் சிப்பாய், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்திச் சென்று மீண்டும் தலைமன்னாருக்குத் திரும்பி சாதனை படைத்துள்ளார்.
59.3 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பாக்கு நீரிணையை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சாதனையாளர், குமார் ஆனந்தன், 51 மணித்தியாலங்களில், நீந்திக் கடந்து சாதனை படைத்திருந்தார்.
1971ஆம் ஆண்டு அவர் நிகழ்த்திய இந்தச் சாதனை, 50 ஆண்டுகளாக இதுவரை முறியடிக்கப்படாமல் இருந்து வந்தது.
அவரது சாதனையை முறியடிக்கும் வகையில் றொஷான் அபேசுந்தர என்ற விமானப்படைச் சிப்பாய் நேற்று அதிகாலை 2 மணியளவில் தலைமன்னாரில் இருந்து தமது சாதனை முயற்சியை ஆரம்பித்திருந்தார்.
நேற்று தனுஷ்கோடியை சென்றடைந்த றொஷான் அபேசுந்தர இன்று காலை மீண்டும் தலைமன்னாருக்கு திரும்பினார்.
அவர் 28 மணித்தியாலங்கள், 19 நிமிடங்கள், 43 செக்கன்களில் இந்தச் சாதனையை படைத்துள்ளார்.





