கனடாவில் கொரோனா தொற்று பரவல் வீதம், அமெரிக்காவை விட அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ஏழு நாட்கள் சராசரியின்படி, ஒரு மில்லியன் பேரில், 205.73 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை அமெரிக்காவில் ஒரு மில்லியன் பேரில், 205.12 பேருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த ஏழு நாட்களில் கனடாவில் சராசரியாக 7 ஆயிரத்து 967.7 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.
அத்துடன் கனடாவில் கடந்த 14 நாட்களில், நாளாந்த தொற்று 82 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
இதுவரையில்லாத அளவாக கனடாவில் வெள்ளிக்கிழமை 9 ஆயிரத்து 255 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், தரவுகள் தெரிவிக்கின்றன.