இந்தோனேசியாவில் கிழக்கு நூசா தெங்காரா மாகாணத்தின் தெற்கே சவு கடல் பகுதியில் புயலின் பாதிப்புகளை முன்னிட்டு கடல் அலைகள் 6 மீற்றர் உயரத்திற்கு எழும்பியுள்ளன
புயலை தொடர்ந்து கனமழை பெய்ததுடன், பலத்த காற்றும் வீசியது. இதனால் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலர் உயிரிழந்தனர். அவற்றில் கிழக்கு புளோரெஸ் மாவட்டத்தில் 72 பேர் அதிக அளவாக உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர, லெம்பாட்டா, அலோர், மாவட்டங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. மற்றும் மாகாண தலைநகர் குபாங் நகரில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு வாடகை வீடுகளில் தங்க வைத்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் செரோஜா புயலில் சிக்கி 177 பேர் உயிரிழந்துள்ளதோடு. 45 பேர் காணாமல் போயுள்ளனர்.