மறைந்த பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு தொடர்பாக, அவரது மனைவியும் இங்கிலாந்து மகாராணியுமான இரண்டாவது எலிசபெத் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு வரும் ஏப்ரல் 17-ம் திகதி நடைபெறுவதுடன், அன்று மாலை 3 மணிக்கு பிரித்தானியா முழுவதும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்படும்.
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இறுதிச்சடங்கில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் 30 பேர் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளதுடன், விமரிசையான ஊர்வலம் மற்றும் அரசு மரியாதை எதுவும் முன்னெடுக்கப்படாது.
இறுதிச்சடங்கில் ராணுவத்தினர், குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இளவரசரின் தனிப்பட்ட அதிகாரிகளும் பங்கேற்பார்கள்.
இறுதி ஊர்வலம் முடியும் வரையில் தேவாலய மணிகள் முழங்கும். அத்துடன் துப்பாக்கி குண்டு முழங்க மரியாதை செலுத்தப்படும்.
இறுதிச்சடங்குகளில் பங்கேற்கும் நபர்களின் பட்டியல் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் எனவும், பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.