ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகளுக்கு, சுமார் 650 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆணைக்குழுவின் இறுதிக்கட்ட செலவினங்கள் உள்ளடக்கப்படாமலேயே இந்தளவு நிதிச் செலவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனையும் சேர்த்தால், இதற்காக செலவிடப்பட்ட நிதி மிகவும் அதிகமானதாக இருக்கும் என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சமர்ப்பிக்கப்பட்ட, ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, சுமார் ஒரு இலட்சம் பக்கங்களைக் கொண்டதாக இருந்தது.
இந்த அறிக்கையை அச்சிடுவதற்கு, சுமார் 10 மில்லியன் ரூபா செலவு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், 40 ஆயிரம் பக்கங்களில், சாட்சியங்கள் இடம்பெற்றுள்ளன. சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால், 2019 செப்ரெம்பர் மாதம் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான இந்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றரை ஆண்டுகளாக விசாரணைகளை நடத்தி, 450 சாட்சிகளிடம் சாட்சியங்களைப் பெற்றதுடன், மேலும், ஆயிரத்து 100 பேரிடம், வாக்குமூலங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது