வரும் 2024ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி மையமான நாசா, அமெரிக்க கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஒருவரை சந்திரனுக்கு அனுப்பவுள்ளது,
அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் ஆட்சியில் பிறநாட்டு குடியேறிகளுக்கும், அமெரிக்க கறுப்பின மக்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் வரும் 2024ஆம் ஆண்டு சந்திரனுக்கு விண்வெளி ஓடம் ஒன்றை அனுப்ப நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஆகியோரது அறிவுறுத்தலின்படி இந்த முறை கறுப்பின பெண் விஞ்ஞானி ஒருவரை சந்திரனுக்கு அனுப்பலாம் எனத் தீர்மானித்துள்ளனர்.
இதன்மூலமாக அமெரிக்காவில் தலைசிறந்து விளங்கும் கறுப்பின விஞ்ஞானிகளுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் என்று ஜனநாயக கட்சி நினைக்கிறது.
ஜோ பைடனின் இந்த முடிவு அமெரிக்க கறுப்பின மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.