பிரதமர் ஜஸ்டின் ரூடோவிற்கும், எதிர்க்கட்சித்தலைவர் எரின் ஓ டூலுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இந்த வார இறுதிக்குள் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை சமஷ்டி அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
மேலும், பிளாக் கியூபெகோயிஸ் தரப்புடனும் பிறிதொரு சந்திப்பை நடத்துவதற்கும் பிரதமர் ரூடோ திட்டமிட்டுள்ளார்.