கொரோனா தொற்றினால், முற்றிலுமாக நுரையீரல் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, கனடாவில் முதல் முறையாக, இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது,
மிசிசாகாவைச் (Mississauga) சேர்ந்த 61 வயதுடைய குறித்த நோயாளி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, சுவாசிக்க முடியாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது நுரையீரல் செயற்படும் திறனை இழந்திருந்த போதும், ஏனைய உடல் உறுப்புகள் நல்ல நிலையில் இருந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவருக்கு ரொறன்ரோ பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பின் தலைமை அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் Shaf Keshavjee தலைமையிலான மருத்துவர்களால் இரட்டை நுரையீரல் மாற்ற அறுவைச் சிகிச்சை கடந்த பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து நோயாளி தற்போது முற்றிலுமாக குணமடைந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.